வலுக்கும் மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்! வீதிக்கு இறங்கிய மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர் (காணொளி)
புதிய இணைப்பு
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களது போராட்டம் தற்போது வலுப்பெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தங்களது கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் அதிபர் பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவத்தினர் குவிப்பு
அதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சுகாஸ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மக்களுடைய ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக காவல்துறையினர், கலகமடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் போராட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.