மட்டக்களப்பில் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணம்
மட்டக்களப்பு - கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று கர்ப்பினி பெண் ஒருவரும் சிறுநீரக நோயளி ஒருவருமாக இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பினி பெண் ஒருவரும் பிறைந்துரைச்சேனை அறபாறை வீதியை சேர்ந்த 51 வயதடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்த கர்ப்பிணிப் பெண் நாளை திங்கட்கிழமை பிரசவ அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வயிற்றில் சிசுவுடன் மரணமடைந்துள்ளார்.
இதே வேளை மரணமடைந்த சிறுநீரக நோயாளி நேற்று இரவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணியளவில் மரணமடைந்துள்ளார்