இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு

Ampara Climate Change Weather
By Shadhu Shanker Nov 25, 2024 10:29 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இயற்கை
Report

சீரற்ற காலநிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை( 25.11.2024) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 9583 பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அதில் 7221 பாடசாலை பரிச்சாதிகளும், 2361 பேர் தனியார் பரிட்சாத்திகளாவர். மாவட்டத்தில் 69 பரீட்சை நிலையங்களும் 8 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

விசேட போக்குவரத்து

தொடர்ச்சியான மழை வீழ்ச்சிக்கு மத்தியிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு | Bay Of Bengal Storm Causes Heavy Rain Floods Alert

இந்நிலையில், மாவட்டத்தில் நிலவும் சீரற்ற கால நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பட்டிருப்பு மற்றும் கல்குடா கல்வி வலையங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்கு குழுவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

இயல்பு வாழ்க்கை

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு | Bay Of Bengal Storm Causes Heavy Rain Floods Alert

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவுர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழை

இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு | Bay Of Bengal Storm Causes Heavy Rain Floods Alert

கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன.

காலநிலை மாற்றத்தால் கடற்தொழிலாளர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர்

இதேவேளை, பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர், சம்பூர், மல்லிகைத்தீவு, பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை: பரீட்சாத்திகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு | Bay Of Bengal Storm Causes Heavy Rain Floods Alert

மேலும் மூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்தை மேவி சுமார் 3 அடிக்கு மேல் நீர் செல்கின்றது. இதனால் இப்பாலத்தை கடந்து பயணிப்போர் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                              
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016