வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

Vavuniya Climate Change Weather Floods In Sri Lanka
By Thulsi Nov 25, 2024 09:59 AM GMT
Report

புதிய இணைப்பு

வவுனியா - செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் குளம் உடைபடுக்கும் அபாயம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதி கம நல சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விவசாயிகள் உடனடியாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

100 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலத்தை கொண்ட ராமயன்குளம் அதிகளவான மழை வீழ்ச்சியின் காரணமாக உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

எனவே இப்பேரிடரை தடுக்கும் முகமாக விவசாயிகளினால் மண் மூடைகள் அடுக்கி முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதலாம் இணைப்பு

வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன.

நேற்று (24.11.2024) முதல் பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியாவில் பல குளங்கள் நிறைந்துள்ளன.

அந்தவகையில், பேராறு நீர்ததேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையினாலேயே வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இதனால் இதற்கு கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் | Heavy Rain With Thunder In Jaffna

ஒமந்தை, பாலமோட்டையில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் அணைக்கட்டில் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் நிலம் நீரால் சூழப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மேலும் இதனை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கையினை கமக்கார அமைப்பு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் | Heavy Rain With Thunder In Jaffna

யாழ். இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு

இதேவேளை, யாழ்ப்பாணம் (Jaffna) - தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப்பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணத்தால் குறித்த வீதியினூடாக போக்குவரத்து செய்யும் அப்பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் | Heavy Rain With Thunder In Jaffna

இந்நிலையில் நாவற்காடு, கரம்பைக்குறிச்சி இளைஞர்கள் அதிரடி முயற்ச்சியாக தமது நிதிப்பங்களிப்புடன் குறித்த வீதியினூடாக மக்கள் சிரமப்படாது செல்லும் வகையில் சீர் செய்துள்ளனர்.

இந்த வீதிக்கான சீர் செய்யும் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கான செலவை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வாறான செயற்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலதிக செய்திகள் - கஜிந்தன்

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் | Heavy Rain With Thunder In Jaffna

வவுனியாவில் தொடரும் கடும் மழை - குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் | Heavy Rain With Thunder In Jaffna

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் : ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் சேவை

வடக்கு மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் : ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் சேவை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026