பிரதேசவாதம் கடந்து ஒற்றுமையாக இருங்கள் - தமிழ் பேசும் மக்களுக்கு ஆலோசனை
பிரதேசவாதம் கடந்து சம்மாந்துறையில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் சகோதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் (Ameer Apnan).
சது/ தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,
''சம்மாந்துறை விளையாட்டு வீரர்களுக்கான பொது மைதானம் பல வருடங்களின் பின் உருவாகிக்கொண்டு வருகின்றது. இருந்தாலும் கடந்த காலங்களில் நாம் பயன்படுத்தி வரும் பொது மைதானத்தில் பல சிக்கல்கள் உருவாகின.
நாங்கள் பிரதேசவாதம் கொண்டோரில்லை. சம்மாந்துறையில் வசிக்கும் முஸ்லிம், தமிழ் சகோதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுவே எனது அவா.
பொதுநலமான முறையில் தான் பொது மைதானப் பிரச்சினையில் தலையிட்டேன். அப்பிரதேச மக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் குந்தகம் விளைவிக்காமல் மைதானத்தை பாதுகாக்க போராடினேன்.
ஏதோ ஒரு வகையில் அனைவரின் ஒத்துழைப்போடும் இன்று பிரச்சினைகள் முடிவுற்றுள்ளன'' என அவர் தெரிவித்தார்.