இலங்கையின் அழகை உலகிற்கு கொண்டு செல்லும் கண்காட்சி
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில், இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் 'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சி ஹொலிவுட்டில் உள்ள 'Celebrity Centre International' இல் இன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
அமெரிக்க - இலங்கை புகைப்படக் கலைச் சங்கம் மற்றும் லொஸ் ஏஞ்சலஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
பூமியைப் பாதுகாப்போம்
இந்தக் கண்காட்சியில் பாரம்பரிய இலங்கை நடன நிகழ்ச்சிகள், தொழில்முறை புகைப்படப் பட்டறைகள் மற்றும் ஆவணப்படத் திரையிடல் ஆகியவையும் இடம்பெறும்.

அத்துடன் இளைய தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்கும் வகையில், உலக பூமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “பூமியைப் பாதுகாப்போம்” ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் விருது பெற்ற கலைஞர்களின் புகைப்படங்கள் ஊடாக இலங்கைத் தீவின் வளமான பல்லுயிர்ப் பெருக்கம், பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்