கல்வி முறைமை மாற்றம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்
அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள புதிய கல்வி முறையின் இலக்குகளில் ஒன்று, நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதாகும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டம் இரட்டைப்பெரியகுளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை மையப்படுத்தப்பட்ட கல்வி முறையிலிருந்து விடுபட்ட ஒரு விரிவான கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், எந்த மாணவரும் பாடசாலை கல்வியைத் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, பதின்மூன்று ஆண்டுகள் கல்வி அனைத்து மாணவர்களின் உரிமை என்பதையும் உறுதி செய்வதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை முறை மாற்றம்
இதன்படி, அந்த விரிவான கல்வியை மாற்ற, பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம், ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள், பரீட்சை முறைகள், வகுப்பறை வடிவமைப்பு மற்றும் பாடசாலைகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
