உலக அரங்கில் இன்னுமொரு போர் - ஆவணப்படத்தின் மூலம் தாய்வானை அச்சுறுத்தும் சீனா
சீனா தாய்வானுக்கிடையில் நீண்ட காலமாகவே முரண்பாடுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், சீன இராணுவத்தின் 96ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சீனா ஆவணப்படமொன்றினை வெளியிட்டுள்ளது.
சேயிங் ட்ரீம்ஸ் என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சீனா போருக்கு தயாராகி இருப்பது போன்றதான வகையில் காட்சியமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்விடயமானது தாய்வான் நாட்டிற்கு சீனா அளிக்கும் எச்சரிக்கை போல இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்வானுக்கெதிரான சீனாவின் அச்சுறுத்தல்கள்

தீவு நாடான தாய்வானை சீனா தனக்கு சொந்தமான நிலப்பரப்பாக கூறி வருவதோடு, தேவையேற்பட்டால் இராணுவ ஆக்கிரமிப்பை கொண்டு கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜோயின்ட் ஸ்வார்ட் எனும் தாய்வானுக்கெதிரான இராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், கடந்த மாதம் தாய்வானுக்கு அமெரிக்கா 2800 கோடி மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கிய நிலையில் அதற்கும் சீனா தாய்வான் பரப்பில் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவின் இப்படமானது தாய்வான் சீன போருக்கான அரைக்கூவலாக இருக்கலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.