மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதல் : சீனா கண்டனம்
சீனாவின் நான்சான் நகரின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஏராளமான சீன மக்கள் காயமடைந்துள்ளனர்.
மியான்மரின் ஆளும் ஆட்சிக் குழுவிற்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான சண்டையின்போது பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை கண்டனம்
இந்நிலையில், சீனர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கூறுகையில்,
“வடக்கு மியான்மர் மோதலில் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக விரோதத்தை நிறுத்திவிட்டு, எல்லையில் அமைதி காக்கவும்.
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் மோசமான சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |