சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூனை கைப்பற்றியது அமெரிக்கா
United States of America
China
By Sumithiran
சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூனை கைப்பற்றியுள்ளது அமெரிக்கா.
சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இவ்வாறு விழுந்த அந்த உளவு பலூனை மீட்க அமெரிக்க கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்ட படைகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தின.
உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா
இந்நிலையில், கடலில் விழுந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. உளவு பலூனில் இருந்த கருவிகளின் சிதறிய பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
எஞ்சிய பாகங்களை தேடும் பணியையும் அமெரிக்க விமானப்படை முடுக்கிவிட்டுள்ளது.
ஒரு விமானத்தின் எடை
இதனிடையே சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் , அது ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி