பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கஞ்சாவுடன் கைது!
பாதாள உலகக் குழு உறுப்பினர் பெக்கோ சமனுக்கு நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் ஒருவர் 15 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயன திரவங்கள் உள்ளடங்கிய இரு கொள்கலன்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
கஞ்சா பறிமுதல்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மித்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி என்பவர் போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாக கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
