முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து : சட்டமூலத்திற்கு எதிராக மேலும் மனுக்கள்

Mahinda Rajapaksa Supreme Court of Sri Lanka President of Sri lanka Sri Lanka Government
By Sathangani Aug 21, 2025 05:06 AM GMT
Report

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு  எதிராக மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் குறித்த  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே (Manoj Gamage) மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க பிரித்தானியாவுக்கு அழுத்தம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க பிரித்தானியாவுக்கு அழுத்தம்

சட்டமா அதிபர்

அத்துடன் இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து : சட்டமூலத்திற்கு எதிராக மேலும் மனுக்கள் | Benefits For Former Presidents Cancelled Petition

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 01 முதல் 04 வரையான சரத்துக்கள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சரத்துக்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகள் நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இறையாண்மை மற்றும் மக்களின் இறையாண்மையை மீறுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் செயற்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

அரச நிறுவனங்களில் செயற்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

சர்வஜன வாக்கெடுப்பு

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சரத்துக்கள் ஒட்டுமொத்த அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும், சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இதன் ஊடாக அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள 1, 3, 4 பிரிவுகள் மற்றும் 12(1) பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து : சட்டமூலத்திற்கு எதிராக மேலும் மனுக்கள் | Benefits For Former Presidents Cancelled Petition

அதன்படி, குறித்த சட்டமூலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற, அது நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா மற்றும் இரண்டு நபர்களால் குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளை அன்புடன் ஏற்போம்: அரச தரப்பின் அறிவிப்பு

இலங்கை அகதிகளை அன்புடன் ஏற்போம்: அரச தரப்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026