ஆண்கள் தினமும் ஏலக்காய் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள்
இன்றைய உலகில் சுவையூட்டி பொருளாகவும் விலை உயர்வான பொருளாகவும் பார்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்றாகும். இந்த ஏலக்காய் குறிரத்த நில நாடுகளில் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.
குறிப்பாக குவாத்தமாலா, தன்சானியா, இலங்கை, எல் சல்வடோர், வியட்நாம், லாவோசு, கம்போடியா, பப்புவா நியூ கினியா, தாய்லாந்து, ஹொண்டுராஸ், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகள் முதலிடம் பெறுகின்றது.
இத்தகை ஏலக்காய், இந்திய துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப் படுகிறது. அது மட்டுமல்ல ஏலக்காய் ஒரு மருத்தவப் பொருளாகவும் பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் இதய பாதிப்பு போன்ற தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது என வைத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இந்திய இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் முக்கியானவை ஒன்று ஏலக்காய். ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது.
இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் தினமும் ஆண்கள் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.
ஏலக்காயின் நன்மைகள்
* மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. அது போல பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக ஏலக்காய் விளங்குகிறது.
* மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காயின் வாசனை உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்சி, பக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
* உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்சினைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது. வாய் துர்நாற்றம், வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது.
எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி தேநீரில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர பல நன்மைகளை பெறலாம்.