ட்ரம்பை எச்சரித்த பெஞ்சமின் நெதன்யாகு
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதலாவது நிபந்தனையே லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.
அத்துடன் இஸ்ரேலிய படைகள் லெபனானில் நிலைகொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற வேண்டும்.
ஆனால் இஸ்ரேல் அதற்கு உடன்படவில்லை.இன்றுவரை லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் நடந்தவண்ணமே உள்ளன.
மறுவளமாக லெபனானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அது என்னவென்றால் லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சுமார் 600 சதுர நிலப்பரப்பில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதியை வழங்குவதாகும்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் 100 வீதம் களையப்படும்வரை இஸ்ரேலிய படைகள் நிலைகொள்வதற்கான அனுமதி.
இந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரில் கடந்தவாரம் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,அமெரிக்காவிற்கும் குறிப்பாக ட்ரம்பிற்கும் நேரடியாக விடுத்த எச்சரிக்கை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 10 மணி நேரம் முன்