இஸ்ரேலுடன் கூட்டினையும் இந்திய - புதிய பிரதமருக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய மோடி
இஸ்ரேலில் 5 முறை பிரதமராக இருந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததன் மூலம் இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று(டிசம்பர் 29) பதவியேற்றார்.
இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மை
73 வயதான நெதன்யாகு, ஏற்கனவே இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்தவர். நெதன்யாகு தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றுள்ளதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் இஸ்ரேலில் கடந்த மாதம் 5-வது பொதுத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி, மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
மீண்டும் ஆட்சி
எதிர்த்துப் போட்டியிட்ட யாயிர் லாபிட் கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதன் மூலம், பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இதையடுத்து, 1996 - 1999, 2009 - 2021 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்காக மனமார்ந்த வாழ்த்துகள்.
Heartiest congratulations @netanyahu for forming the government. Looking forward to working together to strengthen our strategic partnership.
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
நமது கூட்டாண்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவோம்." என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 21 நிமிடங்கள் முன்
