தொடர்ந்து ஒரு வருடமாக சகோதரனால் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை!
srilanka
child
abuse
beruwala
By Vasanth
பேருவளை பகுதியில் தனது சகோதரியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதில் பேருவளை பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது கைத்தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காட்டி சுமார் ஒரு வருடமாக தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபரின் வசம் இருந்த கைத்தொலைபேசியை பொலிஸார் எடுத்ததுடன் சிறுமி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பேருவளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி