கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்: பயனால் வியப்படைவீர்கள்
Hair Growth
Beauty
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தய விதைகள் - 1 கிண்ணம்
- தேங்காய் எண்ணெய் - அரை கிண்ணம்
- ஆமணக்கு எண்ணெய் - 1 கிண்ணம்
- தேவையான அளவு தண்ணீர்
பயன்படுத்தும் முறை
- இந்த எண்ணெயை தயாரிக்க, முதலில் ஒரு கிண்ணம் வெந்தயத்தை மிக்ஸியில் அரைக்கவும்.
- இதற்குப் பிறகு, ஒரு ஆழமான மற்றும் அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கண்ணாடி கிண்ணத்தை வைக்கவும்.
- இப்போது பாத்திரத்தை பாதியளவு தண்ணீரில் நிரப்பவும்.
- நீர் மட்டம் கிண்ணத்திற்கு கீழே இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- இதற்குப் பிறகு, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, கிண்ணத்தை பாதியளவுக்குக் குறைவாக நிரப்பவும்.
- இப்போது கிண்ணத்தில் ஆமணக்கு எண்ணெயையும் கலக்கவும்.
- எண்ணெய் நன்கு கொதித்த பிறகு, அதில் அரைத்த வெந்தயப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- நன்றாக வெந்து, எண்ணெய் சிறிது கெட்டியானதும், அதை ஒரு கண்ணாடி கொள்கலனில் சேமிக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
