அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு எண்ணெய் போதும் !
அநேகமான பெண்களுக்கு முடி வளர்ச்சியில் ஒரு தனி அக்கறை உண்டு. நீண்ட, அடர்த்தியான, மென்மையான, பளபளப்பான முடியை அனைவரும் விரும்புகிறார்கள்.
தலைமுடி என்பது அனைத்து பெண்ணின் அழகையும் அதிகரிக்கும். ஆனால் இந்த தலைமுடி உலர்ந்து, உயிரற்ற மற்றும் மெல்லியதாக மாறும்போது, அவை மிகவும் மோசமாக இருக்கும்.
அத்துடன் முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல், வளர்ச்சியின்மை மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகள் இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகிவிட்டன.
இந்த பிரச்சினையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இதற்கு நாம் வீட்டில் உள்ள பொருட்களை சிறந்த எண்ணெயை செய்ய முடியும்.
அந்தவகையில் வீட்டிலேயே இந்த எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 கிண்ணங்கள்
கறிவேப்பிலை - அரை கிண்ணம்
வெங்காயம் - கால் கிண்ணம் (நறுக்கியது)
வெந்தயம் - அரை கிண்ணம்
இஞ்சி - கால் கிண்ணம் (நறுக்கியது)
நைஜெல்லா விதைகள் - அரை கிண்ணம்
கற்றாழை ஜெல் - அரை கிண்ணம்
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தேங்காய் எண்ணெயில் கலக்கவும்.
பின்னர் நிறம் மாறும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைத்து அதனை வடிகட்ட வேண்டும்.
தொடர்ந்து குறித்த எண்ணெயை ஒரு கண்ணாடி போத்தலில் நிரப்பவும்.
இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு 3 முறை மசாஜ் செய்யும் போது சில வாரங்களில் வித்தியாசத்தை உணரலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
