சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Tamils SL Protest Northern Province of Sri Lanka
By Sathangani May 19, 2025 07:33 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (Human Rights Commission) முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் குறித்த முறைபப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி - பிரதீபன்

மூன்றாம் இணைப்பு

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் (19-05-2025) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்றுமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த புதன்கிழமை (14-05-2025) ஆனையிறவு உப்பளத்தின் முன்பாக முன்னெடுத்து இருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

குறித்த போராட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சமத்துவ கட்சியினுடைய ஆதரவாளர்கள் பளைப் பிரதேச சபையினுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினுடைய பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

ஆனையிறவு (Elephant Pass) உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து குறித்த பகுதியில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைககளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் (16) போராட்டம் இடம்பெற்ற நிலையில் அங்கு பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், போராட்டத்தை தடை செய்யுமாறு கோரி நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

முதலாம் இணைப்பு 

ஆனையிறவு (Elephant Pass) தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றையதினம் (14) ஆனையிறவு உப்பளத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”ஆனையிறவு உப்பளத்தில் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர்.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

பழி வாங்குவோம்...! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

பழி வாங்குவோம்...! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

ஊழியர்களுக்கான தகவல்

எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்துச்செல்ல வேண்டும்.

மதியம் 10 மணி ஆனதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர்.

மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை.

ஒரு ஊழியர் உப்பளத்தில் வேலை செய்யும்போது இறந்தால்கூட எமது பணத்தில் தான் அவரது சடலத்தை கொண்டு செல்ல வேண்டும், அவரது கண்ணீர் அஞ்சலி பத்திரிகைகள் கூட எமது பணத்தில் தான் வெளியிட வேண்டுமே தவிர நிறுவனம் எமக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது.

கழன்று ஓடிய பேருந்தின் சக்கரம் - நுவரெலியாவில் தொடரும் விபத்துக்கள்

கழன்று ஓடிய பேருந்தின் சக்கரம் - நுவரெலியாவில் தொடரும் விபத்துக்கள்

உலருணவு பொதி

இந்த உப்பளத்தை திறந்து வைக்கும்போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறினார், ஆனால் எமக்கு பின்னர் வழங்கப்பட்டது 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே.

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே அளவான போனஸ் கொடுப்பனவே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால் இங்கு எமது வரவினைப் பார்த்து, மிகவும் குறைந்த போனஸ் தொகையே கொடுப்பார்கள்.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

வேலைக்கு வராதது எமது பிழை அல்ல. எமக்கு சுழற்சி முறையிலான வேலையையே வழங்குகின்றனர். ஆகையால் நாங்கள் எப்படி ஒழுங்காக வேலைக்கு வருவது? எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை.

ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுகிறது.

ஒரு நாள் 5 ஊழியர்களின் உழைப்பு மட்டும் போதும் இங்கு வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொடுப்பதற்கு அவ்வளவு இலாபம் ஈட்டும் உப்பளமாகவும், இலங்கையின் மிகவும் பெரிய உப்பளமாகவும் இந்த உப்பளம் காணப்படுகிறது.

தமிழர் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்

தமிழர் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்

உப்பின் விலை அதிகரிப்பு

ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர். பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களை கூட மதிப்பதில்லை.

இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அதனை தட்டிக்கழிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர்.

இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்?

மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன.

ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்த தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத்தான் வேண்டும். ஆனால் இங்கே அவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

பெயர் மாற்ற விவகாரம்

ரஜ உப்பு என்ற பெயரை மாற்றம் செய்து ஆனையிறவு உப்பு என்ற பெயரில் மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது.

ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர்.

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Elephant Pass National Saltern Employees Protest

இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை.

இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்களை கதைப்பதற்கு உள்ளே அழைத்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட ஊழியர்களும் உள்ளே சென்றோம். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

உள்ளே சென்று கலந்துரையாடியபோது அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் மண்வெட்டி பிடி திருடினோம், உப்பு திருடினோம் என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றார்களே தவிர எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதுபோல் தெரியவில்லை.

இது பார்ப்பதற்கு வெளியே ஒரு தேசிய உப்பளமாக காணப்பட்டாலும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும்“ என தெரிவித்தனர். 

நாட்டில் ஏற்படும் 70 சதவீத மரணங்களுக்கு இது தான் காரணம் : அமைச்சின் அறிக்கை

நாட்டில் ஏற்படும் 70 சதவீத மரணங்களுக்கு இது தான் காரணம் : அமைச்சின் அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி