கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த துவிச்சக்கர வண்டி பவனி
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - புத்தூரில் அமைந்துள்ள தூய லூகா மெதடிஸ்த திருச்சபை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் துவிச்சக்கரவண்டிப் பவனி இன்றையதினம் குறித்த வைத்தியசாலையை வந்தடைந்தது.
கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள், சிங்களவர்கள், வெள்ளையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி பவனியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 12.02.2025 அன்று 80 பேர் கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் பயணம் செய்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தின் புத்தூரை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மங்கல வாத்தியங்கள் இசைக்க வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வு ஆரம்பமாகின்றபோது கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரும் இணைந்துகொண்டு சுமார் 10 கிலோமீற்றர்கள் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தனர்.
அத்துடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் துவிச்சக்கர வண்டி போட்டியில் பதக்கம் பெற்றவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் பு. கஜிந்தன்
முதலாம் இணைப்பு
பிரித்தானியாவிலுள்ள (UK) தொண்டு நிறுவனம் ஒன்று யாழிலுள்ள வைத்தியசாலைக்காக நிதி சேகரிப்பதற்கு கொழும்பில் (Colombo) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) துவிச்சக்கரவண்டியில் வந்தடைந்துள்ளனர்.
இந்த துவிச்சக்கரவண்டி பயணத்தில் 60 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி ஆரம்பமான குறித்த பயணம் இன்று காலை கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவை (Reecha) வந்தடைந்துள்ளது.
றீ(ச்)ஷாவை வந்தடைந்த இவர்கள் நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் - புத்தூரை சென்றடையவுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான 450 Km தூரத்தை 4 நாட்கள் துவிச்சக்கரவண்டியில் பயணித்து நாளை (15) நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூரில் அமைந்துள்ள மெதடிஸ்த வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு துவிச்சக்கரவண்டியோடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/97f2f2de-02cd-445e-9ba5-6e711a63a13f/25-67b06a707bf30.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/389f918e-c138-4989-a247-896e39e358f6/25-67b06a7118e3c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4557ad13-ecc8-4882-8460-a259f0c0daaf/25-67b06a71b71e0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ef34a045-e853-44b4-b200-3fad1e79243e/25-67b06a9f625af.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)