தலையிட்டால் விளைவுகள் மோசமாகும்! ரஷ்யாவை கடும் தொனியில் எச்சரித்த அமெரிக்கா

America Russia Joe Biden Ukraine Vladimir Putin Jen Saki Yuri Ushakov
By Chanakyan Jan 01, 2022 08:01 AM GMT
Chanakyan

Chanakyan

in உலகம்
Report

ரஷ்ய அதிபர் விளாடிமின் புடினை (Vladimir Putin) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கடுமையாக எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அண்மைக் காலங்களாக மோதல் வலுப்பெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் முதன் முறையாக நேரில் சந்தித்து பேசினார்.

இருந்தபோதிலும் இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இரு நாடுகள் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டுத் தலைவர்களும் இன்னும் சில நாட்களில் மீண்டும் ஜெனிவாவில் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த நேரடி சந்திப்புக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக அமைந்ததாகவும், உக்ரைன் விவகாரத்தில் புடினுக்‌கு ஜோ பைடன் நேரடியாக எச்சரிகை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 

உக்ரைனுடனான பதற்றத்தை தணிக்க புடினை, ஜோ பைடன் அறிவுறுத்தினார். மேலும் ரஷ்யா உக்ரைனை மேலும் ஆக்கிரமித்தால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலளிப்பார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதோடு, உக்ரைனுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் என கூறி புடினை ஜோ பைடன் நேரடியாக எச்சரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜென் சாகி (Jen Saki) கூறினார்.

இதனிடையே ஜோ பைடனின் எச்சரிக்கைக்கு புடின் காட்டமாக பதிலளித்ததாக புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் (Yuri Ushakov) தெரிவித்துள்ளார்.

பொருளாதார தடைகள் விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தவறானது என்று குறிப்பிட்ட புதின், இத்தகைய நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான உறவை முற்றிலும் முறியடிக்க வழிவகை செய்யும் என எச்சரித்தார்.

அதோடு உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேர அனுமதிக்கப்பட மாட்டாது என்ற எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டை புதின் மீண்டும் வலியுறுத்தினார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023