வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி! பெண்ணொருவர் அதிரடி கைது
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து பணம் மோசடி செய்த பெண்ணொருவரை ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக சந்தேக நபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து விசாரைணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று (26) காலை அலுபோமுல்ல காவல்துறை பிரிவில் ஹொரணை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், பானந்துரை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்