பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - 42 பேர் காயம்
தியத்தலாவை பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை (27) தியத்தலாவ தொடருந்து கடவை அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளும் உள்ளுர்வாசிகளும் விபத்தில் சிக்கிய பயணிகளை பாரிய சிரமங்களுக்கு மத்தில் மீட்டுள்ளனர்.
இதில் 36 ஆண்களும் 6 பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்