இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) இன்று (07) புதன்கிழமை அறிவித்துள்ளமை அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
“அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை உடையில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. ஒருநாள் வடிவத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ஓட்டங்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். சராசரி 40.57 ஆகும். 16 இனிங்சில் 383 பந்து வீசி 224 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீ்ழ்த்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

