இந்தியாவிலிருந்து ஆரம்பமான வெங்காய இறக்குமதி : இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
பெரிய வெங்காயத்தின்(onion) விலை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 160 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கும் இறக்குமதியாளர்கள், வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என நம்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி
இந்தியாவில்(india) இருந்து வெங்காயம் இறக்குமதி தொடங்கியுள்ளதே வெங்காயத்தின் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்றும், எதிர்காலத்தில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆதிக்கம் செலுத்திய சீனா
இந்தியா தனது உள்நாட்டுத் தேவையை கருத்திற்கொண்டு வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதிருந்தது.இதனால் சீன(china) வெங்காயம் உள்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஏற்றுமதிக்கான அனுமதியை இந்தியா வழங்கிய நிலையில் சீன வெங்காயத்தை விடுத்து இந்திய வெங்காயம் இலங்கை சந்தைகளில் தாராளமாக கிடைக்கின்றது. இதனால் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |