ஒரு வருடத்தில் அநுர அரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி
Lakshman Yapa Abeywardena
Election
NPP Government
By Sumithiran
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் கூட்டுறவுத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் வரலாற்றில் எந்த அரசாங்கமும் இதுபோன்ற ஒரு தோல்வி விதியை சந்தித்ததில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கூட்டுறவுத் தேர்தல் பொதுக் கருத்தை பிரதிபலிக்காது
கூட்டுறவுத் தேர்தல் பொதுக் கருத்தை பிரதிபலிக்காது என்று அரசாங்க அமைச்சர்கள் இப்போது கூறியிருந்தாலும், திசைகாட்டி எதிர்க்கட்சியில் இருந்து வெற்றி பெற்றபோது, தற்போதைய ஜனாதிபதி அதை பொதுக் கருத்தின் பிரதிபலிப்பு என்று அழைத்ததாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.
னவே, தற்போதைய அரசாங்கம் தொடர்பான உண்மையான பொதுக் கருத்து கூட்டுறவுத் தேர்தல்களில் பிரதிபலிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்