பீகாரில் இரண்டு நாட்களில் 159 மருத்துவர்களுக்கு கொரோனா
பீகாரில் 48 மணி நேரத்தில் 159 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தகவலின்படி பீகார் மாநிலத்தில் 1,386 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 59 மருத்துவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் 72 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளர் டொக்டர் பினோத் குமார் சிங் தெரிவித்தார்
கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 159 மருத்துவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னா மருத்துவமனையின் 87 மருத்துவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று காணப்பட்டதாக மருத்துவமனை தலைமை அதிகாரி சந்திரசேகர் சிங் தெரிவித்தார்.
இலேசான அறிகுறிகளைக் கொண்டுள்ள மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.