பீகார் தொடருந்து விபத்தில் நால்வர் பலி!
பீகாரில் உள்ள ரகுநாத்பூர் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தானது இரவு சுமார் 9.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு தொடருந்தின் (12506) 3 பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
குறித்த விபத்தில் 4 பேர் பலியானதுடன் பல பயணிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயம் அடைந்த பயணிகளை
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தினால் தொடருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
