யாழில் உந்துருளி மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
Jaffna
Accident
By Pakirathan
யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தியில் சற்றுமுன்னர் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் வேகமாக வந்த நபர் ஒருவர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வயோதிபர் ஒருவரின் மேல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் பின் தலையில் பலத்த காயமடைந்த குறித்த வயோதிபர் அங்கிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு, யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம்
அதிவேகத்தில் உந்துருளியை செலுத்தியமை மற்றும் உந்துருளியை திருப்புவதற்குரிய சமிஞ்சைகளைப் பயன்படுத்தாமை விபத்துக்கான பிரதான காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், அங்கு வருகை தந்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி