அம்பாந்தோட்டையில் பில்லியன் கணக்கான டொலர் முதலீட்டுடன் தடம் பதிக்கவுள்ள சீன நிறுவனம்!
hambantota
china company
steel company
By Kanna
சீன எஃகு நிறுவனமான பாவ்வு(Baowu) அம்பாந்தோட்டையில் பில்லியன் கணக்கான டொலரில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன(Palitha Kohana) அண்மையில் அன்ஹுய், மான்ஷானில் உள்ள பாவ்வு எஃகு(Baowu Steel) நிறுவன அலுவலகங்களுக்குச் சென்றதாக சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது கலாநிதி கோஹன நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவரை சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடியதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் கணிசமான முதலீடுகளை முதலிடுவதற்கு இக் கம்பனி முனைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்