25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சந்திரிக்காவை பாராட்டிய Npp அமைச்சர்

Chandrika Kumaratunga Bimal Rathnayake Landslide In Sri Lanka Floods In Sri Lanka Cyclone Ditwah
By Sathangani Dec 11, 2025 04:05 AM GMT
Report

நெருக்கடியான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவில் இருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அல்லோலப்படும் நாட்டு மக்கள்...! நகைச்சுவை காட்டி திரியும் சில அரசியல் தலைமைகள்

அல்லோலப்படும் நாட்டு மக்கள்...! நகைச்சுவை காட்டி திரியும் சில அரசியல் தலைமைகள்

அனைவருக்கும் நிவாரணம்

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். அரச அதிகாரிகள் நெருக்கடி நிலைமை விளங்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

நாடு என்ற ரீதியில் இயற்கை அனர்த்தத்தை எதிர்க்கொண்டுள்ளதை போன்று எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்தாக குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளோம். நெருக்கடியான நிலையில் எங்கு குறைகள் உள்ளது என்பதை தேடிக்கொண்டு இவர்கள் திரிகிறார்கள்.

25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சந்திரிக்காவை பாராட்டிய Npp அமைச்சர் | Bimal Praises Chandrika For Donating Rs 25 Crore

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் மாத்திரம் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் எவ்விதத்திலும் இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் செயற்படுகிறார்கள். அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

தமிழர் பகுதியில் சோகம்...! டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி

தமிழர் பகுதியில் சோகம்...! டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி

25 கோடி ரூபாய் நன்கொடை 

எதிர்க்கட்சியின் தலைவர்கள் அனர்த்த நிலைமையின் போது கண்டிக்கு சென்று அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ள கூடாது.

25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய சந்திரிக்காவை பாராட்டிய Npp அமைச்சர் | Bimal Praises Chandrika For Donating Rs 25 Crore

வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஊழலற்ற அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன.

நெருக்கடியான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்காக மக்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவையும் மக்களுக்காக பயன்படுத்துவோம்” என தெரிவித்தார்.

யாழ். நிதி கொடுப்பனவில் அரச அதிகாரிகள் மோசடி...! உதய கம்மன்பில பகிரங்கம்

யாழ். நிதி கொடுப்பனவில் அரச அதிகாரிகள் மோசடி...! உதய கம்மன்பில பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024