"ரூபிகான் நதியைக் கடப்பது":சட்டத்தரணி சாலியபீரிஸின் பதிவிற்கு அமைச்சர் பிமல் பதில்
Ranil Wickremesinghe
Bimal Rathnayake
Saliya Pieris
By Sumithiran
"ரூபிகான் நதியைக் கடப்பது" 11 மாதங்களுக்கு முன்பு இலங்கை மக்களால் செய்யப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (bimal ratnayake)தெரிவித்துள்ளார்.
இலங்கையை உண்மையான குடியரசாக மாற்றுவதில் உந்து சக்தி இந்த நாட்டு மக்களே என்று அமைச்சர் தனது X கணக்கில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
முடிவுகளை நாட்டின் நலன்கருதி எடுக்கவேண்டும்
49 இல் ஜூலியஸ் சீசர் "ரூபிகான்" நதியைக் கடந்தது பற்றிய வரலாற்றுக் குறிப்பை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் (Saliya-Peiris) தனது முகநூல் பதிவில் வெளியிட்ட பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அரசியலிலோ அல்லது நிர்வாகத்திலோ, சில நேரங்களில் மீளமுடியாத முடிவுகளை ஞானத்துடனும் நாட்டின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டும் எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 2 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்