ஒரேதடவையில் 09 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்
child
birth
mali
By Jaso
25 வயதே ஆன தாய் ஒருவர் மாலியில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசவத்தை பார்த்த வைத்திய நிபுணர், குழந்தைகளை சுமார் மூன்று மாதங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒன்பது குழந்தைகளில் ஐந்து பெண்பிள்ளைகள் மற்றும் மற்ற நான்கு ஆண் பிள்ளைகள் என்று வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மிகவும் அரிதான சம்பவம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் இதற்கு முன்னர் உலகில் பதிவாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவில் ஒரு பெண் 1971 இல் ஒன்பது குழந்தைகளையும், 1999 ல் மலேசியாவிலும் ஒரு தாய் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்