வன்னியில் நடைபெற்ற நடமாடும் சேவையின் ஊடாக பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு (படங்கள்)
வவுனியாவில் நடமாடும் சேவை மூலமாக பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் பிறப்புச் சான்றிதழை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கு. திலீபன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இன்று(18) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 58 பேருக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
நடமாடும் சேவை
நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழை பெறுவதில் சிக்கல் நிலைகளை எதிர்கொண்டிருந்த பலர் குறித்த நடமாடும் சேவையில் நமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்த நிலையிலேயே அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான கு. திலீபன், வட மாகாண பிரதி பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்னம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், உதவிப் பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட பதிவாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் அதிபர் தலைமையில் அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
வவுனியா பிரதேச செயலகம்
வவுனியா பிரதேச செயலகம் காணி விடயங்களில் முன் நின்று செயற்பட்டு பிணக்குகளை தீர்த்து வைக்கின்றது.
எனினும் இவ்வாறான ஒரு நிலை முல்லைத்தீவு பிரதேச செயலகங்களில் காணப்படுவதில்லை என்பதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |