கரூர் துயர சம்பவம் :பின்னணியில் திட்டமிட்ட சதி : திமுக அரசுக்கு சிக்கல்..!
கரூரில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாக தெரிவதாக இந்திய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, பாஜக, நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில், 8 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்தது.
கரூரில் ஆய்வை மேற்கொண்டது
இந்தக்குழு தமிழ்நாட்டிற்கு வந்து சம்பவம் நடைபெற்ற இடமான கரூரில் ஆய்வை மேற்கொண்டது.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி,
‘இந்தச் சம்பவம் நடந்த பிறகு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். செப்டம்பர் 27-ல் ஒரு சோகமான விபத்து நிகழ்ந்தது. என்ன நடந்தது என்பதை பார்க்க நாங்கள் இங்கு வந்தோம். சம்பவ இடத்தை நேரில் பார்த்தோம், அது மிகவும் மோசமாக இருந்தது. உள்ளூர் மக்களும் தாங்கள் கண்டதை எங்களிடம் தெரிவித்தனர்.
விஜய் எந்த நேரத்தில் வந்தார்
விஜய் எந்த நேரத்தில் வந்தார், எத்தனை இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் வந்தனர் என்று அவர்கள் சொன்னார்கள். இவ்வளவு சிறிய இடத்தில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தவறு.
விஜய் ஒரு பெரிய பேருந்தில் வந்தார். இதில் ஏதோ சதி இருப்பதாகத் தெரிகிறது.” என்று ஹேமமாலினி தெரிவித்தார்.
ஏதோ சதி இருப்பதாகத் தெரிகிறது
41 பேர் இறந்தது மிகவும் சோகமானது. மருத்துவமனையில் 51 பேர் இன்னும் வேதனையில் உள்ளனர். எங்கள் கேள்வி, இதற்கு யார் பொறுப்பு? கூட்டம் நடத்தும் இடத்திற்கு அனுமதி அளித்த நிர்வாகிகளும், அமைப்பாளர்களும் யார்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
