சுமந்திரன் தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும் கந்தையா பாஸ்கரன் ஆவேசம்!!
‘சுமந்திரன் தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும்… தமிழ் மக்கள் அதனைச் செய்வார்கள்..” என்று தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபரும், சமூகச் செயற்பாட்டாளரும், முதலீட்டாளருமான கந்தையா பாஸ்கரன்.
IBC தமிழ் தொலைக்காட்சியின் ‘நிலவரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
புலம்பெயர் முதலீட்டார்கள் அரசியலில் கருத்துக்கூறுவது தொடர்பாக சுமந்திரன் முன்வைத்திருந்த கடுமையான விமர்சனம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும் போதே கந்தையா பாஸ்கரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
‘சிக்கல்கள் நிறைந்த ஈழத்தமிழ் அரசியல் அரங்கில் முழு நேரமாக தமிழ் மக்களுக்குப் பணியாற்றக்கூடிய தலைவர்களே தற்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவை… முழு நேரமாக வழக்கறிஞர் தொழிலைச் செய்துகொண்டு பகுதிநேரமாகத் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் தலைவர்கள் தமிழ் இனத்துக்கு அவசியமில்லை..’ என்றும் அவர் கூறியிருந்தார்.
கந்தையா பாஸ்கரன் அவர்களுடைய முழுமையான செவ்வி: