மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி - அலம்பில் துயிலும் இல்லத்தில் அஞ்சலி
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் அலம்பில் மாவீரர் துயிலுமில்லத்தை சென்றடைந்திருக்கிறது.
இதன் போது அலம்பில் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், மாவீரர்கள் தங்களுடைய இன்னுயிர்களை எங்களுக்காக, தமிழினத்தின் உடைய விடுதலைக்காக ஆகுதியாக்கியவர்கள்.
அப்படியான மாவீரர் செல்வங்களுடைய உயிர் தியாகங்கள் உயிர் கொடைகள் தான் தாயக பூமியிலே நிலைத்து வாழச் செய்துகொண்டு இருக்கிறது.
அர்பணிப்புக்கள் - தியாகங்கள்

அவர்களுடைய அந்த அர்பணிப்புக்கள் தியாகங்கள் தான் எங்களை போன்ற செயற்பாட்டாளர்களை தமிழ் தேசிய உணர்வாளர்களை வழிநடாத்திக் கொண்டு இருக்கிறது அப்படிப்பட்ட மாவீரர் செல்வங்களுடைய வித்துடல்கள் விதைக்கப்பட்ட பூமியிலே நின்று வணக்கங்களை தெரிவித்துகொள்கின்றோம் என தெரிவித்தார்.
மேலும், தமிழர் தாயகத்திலே இருக்கின்ற அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அவற்றை பராமரிக்கின்ற மற்றும் வழிபாடுகளை செய்ய கூடிய சுதந்திரம் வேண்டும் எனவும் சுட்டிகாட்டினார்