கறுப்பு ஜனவரி நினைவேந்தலுக்கு அழைப்பு
“கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு - 2022” ஜனவரி மாதம் 26ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடத்த்துவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் திட்டமிட்டுள்ளது.
'படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்' என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாகும்.
தமக்கான உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழில்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு வன்முறைகளை எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி, அழுத்தம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது வழமை.
இதற்கமைய இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், ஊடக நிறுவனங்களின் முழுமையான ஆதரவு கோரப்பட்டுள்ளது.