மீண்டுமொரு “கறுப்பு ஜுலை” வேண்டாம்- கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
colombo
protest
black july
By Sumithiran
மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம் எனத் தெரிவித்து கறுப்பு ஜுலைக் கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று பிற்பகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை நடத்தியது.
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்,இனவாதம் வேண்டாம்,தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளை பாதுகாக்கவும் எனகோரி பதாதைகளை தாங்கியிருந்தனர்.

