கொழும்பில் முற்றுகைப் போராட்டம்! ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் சாத்தியம்
பேரணி
அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் மருதானையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த பின்னர், அங்கு கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, 43 ஆம் படையணி உட்பட 20 இற்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,