கூண்டோடு பதவி விலகிய பணிப்பாளர் சபை
resign
directors
board-of-investment
By Sumithiran
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினர் தமது இராஜினாமா கடிதங்களை (2) அரச தலைவர் செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைவர் சஞ்சய மொஹொத்தல, நிர்வாக சபை உறுப்பினர்களான ஹர்ஷ சுபசிங்க, கலாநிதி ஹர்ஷ கப்ரால் சஞ்சய குலதுங்க மற்றும் ஜயமின் பெல்பொல ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதேவேளை, முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தமது முன்மொழிவுகள் தோல்வியடைந்துள்ளதால் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மரண அறிவித்தல்