நயினாதீவில் படகு விபத்து : பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்
தனியார் படகு மூலம் நயினாதீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி செல்லும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை அதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு 06 வட்டாரத்தை சேர்ந்தவரும் நயினாதீவு சிறிகணேசா வித்தியால அதிபரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான நடராசா மயூரன் (வயது - 48) என்பவரே நீரில் மூழ்கி இன்று (28) மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்பு
குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு சிறிகணேச வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
அண்மையில் சுற்றுலா சென்றவேளை கடலில் மாணவி மூழ்குவதை அவதானித்த பாடசாலை அதிபர் அவரை மீட்கச் சென்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |