யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Accident Ramalingam Chandrasekar
By Thulsi Aug 17, 2026 06:56 AM GMT
Report

யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.

இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை விபத்துக்குள்ளானது.

ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை - பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை - பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

மீட்பு நடவடிக்கை

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.

யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு | Boat Accident Near Nainativu Jaffna

இதனையடுத்து, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின் ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10 பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று

விபத்துக்குள்ளானமைக்கான காரணம்

இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.

யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு | Boat Accident Near Nainativu Jaffna

அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்

பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை

இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026