தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகில் போதைப்பொருட்கள் இருந்தமை உறுதி!
திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த படகில் 11 ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் இருப்பதை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்றொழில் படகு
தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நீண்ட நாள் கடற்றொழில் படகு மற்றும் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்களும் இன்று (24.12.2025) காலை திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் கைப்பற்றபட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |