யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி

Jaffna Sri Lankan Peoples Law and Order
By Dilakshan Jan 04, 2025 09:50 AM GMT
Report

மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் (03) அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் - இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு தடை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு தடை: அமைச்சர் வெளியிட்ட தகவல்


வழக்கு விசாரணை

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி | Body Exhumed After Two Years In Jaffna

அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

உடற்கூற்று பரிசோதனை

குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன் பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி | Body Exhumed After Two Years In Jaffna

அந்தவகையில், சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

அதன்படி, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவல்துறையினர், பிரதேச சபையினர், மன்னார் காவல்துறையினர், மானிப்பாய் காவல்துறையினர், கிராம அலுவலர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் சடலம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020