சூதாட்டத்தால் பறிபோன பெருந்தொகை : புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்த விபரீதம்
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறை வெளியிட்ட தகவல்
காவல்துறையின் தகவலின்படி,அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
அவரது அறையின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் கவனித்தபோது, அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டனர். பிரேதபரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
சூதாட்டத்தால் பறிபோன பணத்தால் விபரீத முடிவு
இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலில் கசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
