முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
Death
By Thulsi
நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமானது நேற்றிரவு (21.11.2025) மஹரகம காவல் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி 4வது ஒழுங்கைக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
மஹரகம காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது.
இச்சம்பவம் ஒரு கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பில் மஹரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி