அரசியல்வாதியின் உறவினர் வீட்டில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்! வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Kanna
கம்பஹா பகுதியில் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து 17 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா - மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கம்பஹா நைய்வல வீதி - உடுகம்பளை பகுதியிலுள்ள அரசியல்வாதியின் உறவினர் வீட்டிற்கு வீட்டுக்கு தொழிலுக்காக அண்மையில் சென்றுள்ளார்.
குறித்த வீட்டில் நீச்சல் தடாகத்தினை சுத்தப்படுத்த இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சீ.சீ.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இதேவேளை, சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்றைய தினம் கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுமி நீச்சல் தடாகத்தில் உள்ள நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி