தமிழர் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
வவுனியாவில் (Vavuniya) உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு அண்மையில் இன்று (01.04.2025) காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், “சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்று காணப்பட்டது.
காவல்துறை விசாரணை
குறித்த நபர் உயிரிழந்து ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் வரை இருக்கலாம். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆண் நபரா அல்லது பெண் நபரா என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
தலவாக்கலையில் மீட்கப்பட்ட சடலம்
இதேவேளை, தலவாக்கலை (Talawakelle) நீர் தேக்கத்தில் மிதந்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் தலவாக்கலை காவல்துறை அதிகாரிகளுக்கு பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று (01.04.2025) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட யுவதி 22 வயது மதிக்கத்தக்க டயகம பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய் உள்ளதாக உறவினர்கள் டயகம காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன குறித்த பெண் இன்று தலவாக்கலை நீர் தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லபட்டுள்ளதுடன் பொலிஸார்சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
