வீட்டின் கிணற்றில் மிதந்த சிசுவின் சடலம் :தாய் கைது
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
By Sumithiran
கல்பிட்டி, கந்தகுடாவ கிராமத்தில் உள்ள வீட்டின் கிணற்றில் இரண்டரை மாத சிசுவின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவசர அழைப்புப் பிரிவுக்கு வந்த தகவல்
இன்று (2) காலை காவல்துறை அவசர அழைப்புப் பிரிவு 119 க்கு அயலவர் வழங்கிய தகவலின் பிரகாரம், காவல்துறையினர் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
முகமது பாத்திமா சீமா என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி